Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கைவிடப்பட்ட குரங்கைப் பொங்கோலில் காப்பாற்றிய ACRES குழுவினர்

பொங்கோலில் தென்பட்ட marmoset என்னும் வகைக் குரங்கு காப்பாற்றப்பட்டுள்ளது. அதிக அளவில் சட்டவிரோதமாகக் கடத்தப்படும் வனவிலங்களில் ஒன்று அது.

வாசிப்புநேரம் -
கைவிடப்பட்ட குரங்கைப் பொங்கோலில் காப்பாற்றிய ACRES குழுவினர்

படம்: Facebook/Animal Concerns Research and Education Society

பொங்கோலில் தென்பட்ட marmoset என்னும் வகைக் குரங்கு காப்பாற்றப்பட்டுள்ளது. அதிக அளவில் சட்டவிரோதமாகக் கடத்தப்படும் வனவிலங்களில் ஒன்று அது.

Animal Concerns Research and Education Society அல்லது ACRES என்னும் வனவிலங்கு மீட்புக் குழுவினர் அந்தக் குரங்கைக் காப்பாற்றினர்.

சிங்கப்பூரில் இவ்வாண்டு காப்பாற்றப்பட்டுள்ள 5ஆவது marmoset குரங்கு அது.

சனிக்கிழமை இரவு, புளோக் 271D, பொங்கோல் வாக்கிற்கு வெளியே குரங்கு திக்குத் தெரியாமல் திரிவதாக வனவிலங்கு மீட்பு அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

ஞாயிறு காலையில் குரங்கைத் தேடி, அதிகாரிகள் சென்றனர். நிலவறைக் கார்நிறுத்துமிடத்தில் அந்தக் குரங்கைப் பார்த்ததாக பொதுமக்களில் ஒருவர் கூறினார்.

அவர் குரங்கை அட்டைப்பெட்டிக்குள் அடைத்த பின்னர், அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.

காப்பாற்றப்பட்ட குரங்கு சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்