Images
  • sg covid women
    (படம்: Nuria Ling/TODAY)

'அமலாக்க நடவடிக்கையை விட, ஒவ்வொருவரின் பொறுப்புணர்வே கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த உதவும்'

சிங்கப்பூரில் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த, அமலாக்க நடவடிக்கையை விட, ஒவ்வொருவரின் பொறுப்புணர்வே அதிகம் உதவும் என்று காவல்துறையும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பொறுப்பற்ற நடத்தைக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை மேற்கொள்வது ஒரு வழி தான்.

ஆனால் அதையே நம்பி இருக்கக்கூடாது என்றும், அதன் மூலம் மக்களை முழுமையாகக் கட்டுப்பாடுகளுக்கு உடன்படச் செய்யலாம் என்று எதிர்பார்க்கக்கூடாது எனவும் கூறப்பட்டது.

வர்த்தக உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் தொடர்பில் அவர்களது கடமைகளை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

KTV கிருமித்தொற்றுக் குழுமம் தொடர்பில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. குழுமம் உருவானதால், அரசாங்கம் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை நடப்புக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது.  

Top