Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு ஓய்விடங்கள் அமைக்க மனிதவள அமைச்சு வழிகாட்டிமுறைகளை உருவாக்கும்

குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு ஓய்விடங்கள் அமைப்பதற்கான வழிகாட்டி முறைகளை இவ்வாண்டு இறுதிக்குள் அமைப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு ஓய்விடங்கள் அமைப்பதற்கான வழிகாட்டி முறைகளை இவ்வாண்டு இறுதிக்குள் அமைப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

துப்புரவாளர்கள், பாதுகாவலர்கள், தோட்ட வேலைகள் செய்வோர் போன்றவர்களுக்கான ஓய்விடங்களை எவ்வாறு அமைக்கலாம் என்பதற்கான கருத்துகளை இம்மாதத்திலிருந்து அமைச்சு சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

அமைச்சின் ஆய்வாளர்கள் இதுவரை 20 இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

தற்போது ஊழியர்களுக்கான ஓய்விடங்கள் பொருள்களைச் சேகரித்து வைக்கும் இடமாகவோ காற்றோட்டம் இல்லாத இடமாகவோ இருக்கின்றன.

புதிய ஓய்விடங்களில் குடிநீர் வசதி, உடமைகளை வைக்கும் பெட்டகங்கள், மின்விசிறிகள்-முதலியவற்றை ஊழியர்கள் எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஸைனல் ஸப்பாரி தெரிவித்தார்.

தற்போது சில உணவங்காடி நிலையங்களிலும், 300 பள்ளிகளிலும் குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு ஓய்விடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அடுத்து, அரசாங்க அமைப்புகளுடனும், நகர மன்றங்களுடனும் ஒன்றுசேர்ந்து ஓய்விடங்கள் குறித்த கருத்துகளை மனிதவள அமைச்சு திரட்டும் என்று கூறினார் திரு. ஸைனல்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்