Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கட்டுப்பாடுகள் ஏன் முரண்படுகின்றன?- விளக்கமளித்த அமைச்சர்கள்

கட்டுப்பாடுகள் எல்லாப் பிரிவுகளிலும் ஒரே மாதிரி இல்லை என்ற குறைகூறல்கள் எழுப்பப்படுவது குறித்து, சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) இன்று பேசினார்.

வாசிப்புநேரம் -
கட்டுப்பாடுகள் ஏன் முரண்படுகின்றன?- விளக்கமளித்த அமைச்சர்கள்

(படம்: Ooi Boon Keong/TODAY)

கட்டுப்பாடுகள் எல்லாப் பிரிவுகளிலும் ஒரே மாதிரி இல்லை என்ற குறைகூறல்கள் எழுப்பப்படுவது குறித்து, சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) இன்று பேசினார்.

COVID-19 பணிக்குழு நடத்திய செய்தியாளர் கூட்டத்தின் போது அது குறித்துப் பேசப்பட்டது.

ஓரிடத்தில் பெரிய கூட்டம் அனுமதிக்கப்படுகிறது, மற்றோர் இடத்தில் சிறிய கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி. ஓரிடத்தில் இசைக்கு அனுமதி, மற்றோர் இடத்தில் அனுமதியில்லை. இப்படிப் பல முரண்பாடுகள் இருப்பதாகக் குறைகூறல்கள் எழுந்துள்ளன.

என்றார் அமைச்சர்.

கிருமிப்பரவல் காலக்கட்டத்தில் மனத்துக்குப் பிடித்ததைச் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பதைத் தங்களால் உணர முடிவதாகத் திரு ஓங் சொன்னார்.

இவற்றை வழக்கத்துக்குக் கொண்டுவந்தால் என்ன, வேறு சில நடவடிக்கைகள் வழக்கமாகிவிட்டனவே என்று பலர் நினைக்கலாம் என்றார் அவர்.

நிச்சயம் அந்த நிலையை எட்டிவிடுவோம் என்றபோதும், உருமாறும் இந்த காலக்கட்டத்தில், முரண்பாடுகள், குழப்பங்களுக்குத் தீர்வு காண்பது மிகவும் சிரமம் என்றார் திரு ஓங்.

அது குறித்துப் பணிக்குழுவின் இணைத்தலைவரான திரு லாரன்ஸ் வாங்கும் கருத்துரைத்தார்.

அபாயத்தைப் பொறுத்தவரை, எது ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழல் என்பதை முடிவு செய்வதில் அரசாங்கம் சமநிலையான ஓர் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது என்றார் அவர்.

அரசாங்கம் நிபுணர்கள், ஆலோசகர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து அபாயத்தை மதிப்பிடுகிறது. இருப்பினும் அது மிகச் சரியானதாக இருக்காது என்றார் திரு வாங். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்