Images
  • Retail Sales
    (படம்: AFP/Roslan Rahman)

கடந்த டிசம்பர் மாதத்தில் 6 விழுக்காடு சரிந்த சில்லறை விற்பனை


கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சில்லறை விற்பனை, அதற்கு முந்தைய ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 6 விழுக்காடு குறைந்துள்ளது.

இந்தத் தகவலைப் புள்ளிவிவரத் துறை வெளியிட்டது.

மருத்துவப் பொருள்கள், குளியலறைப் பொருள்கள் ஆகியவை தவிர்த்த மற்றெல்லாப் பிரிவுகளிலும் சில்லறை விற்பனை குறைந்தது.

மருத்துவப் பொருள்கள், குளியலறைப் பொருள்கள் ஆகியவற்றின் விற்பனை 1.8 விழுக்காடு ஏற்றம் கண்டது.

2017ஆம் ஆண்டையும் 2018ஆம் ஆண்டையும் ஒப்பிடுகையில் மோட்டார் வாகனங்களின் விற்பனை ஆக அதிகமாக, 20.7 விழுக்காடு சரிந்தது.

நவம்பருடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் சில்லறை விற்பனை 3.4 விழுக்காடு குறைந்தது.
 

Top