Images
  • sg (1)

ஆட்குறைப்புச் செய்யும்போது, திருத்தியமைக்கப்பட்ட விதிகளை மீறும் நிறுவனங்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும்

ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நிறுவனங்கள் திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால், கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள-வேண்டியிருக்கும்.

ஆட்குறைப்புச் செய்யப்படும் ஊழியர்களுக்கு அது குறித்த தகவலை இயன்றவரை நீண்ட நாளுக்கு முன்னர் தெரிவிப்பது, அது பற்றி தெரிவிக்கும்போது, மனிதவளப் பிரிவு அதிகாரி அல்லது தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவரைக் கொண்டிருப்பது உள்ளிட்டவை, திருத்தப்பட்ட விதிமுறைகளில் அடங்கும்.

அவற்றை பின்பற்றுத் தவறும் நிறுவனங்கள் வேலை அனுமதி அட்டை பெறுவதற்கான சலுகைகளை இழக்கலாம்.

எதிர்காலத்தில் அத்தகைய நிறுவனங்களுக்கான அரசாங்க ஆதரவு நிராகரிக்கப்படலாம்.

கொரோன கிருமிப்பரவல் பொருளியலைப் பெரிதும் பாதித்திருப்பதால், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில், ஆட்குறைப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை, முதல் காலாண்டை-விட இரு மடங்கு அதிகரித்தது.

ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து, ஊழியர்கள் செய்த புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அத்தகைய சிக்கல்களைக் கையாள, அரசாங்கம், முதலாளிகள், தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து, ஆலோசனை அறிக்கை வெளியிட்டுள்ளன.

வேலை இழந்தவர்களுக்குப் புதிய வேலைகளைத் தேட உதவுவது, பயிற்சி வழங்குவது போன்ற ஆதரவை வழங்குவதற்கு அது ஊக்குவிக்கிறது.

Top