Images
  • Retrenchment
    (படம்: Jeremy Long/CNA)

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆகக் குறைவான ஆட்குறைப்பு எண்ணிக்கை

சிங்கப்பூரின் ஊழியர் சந்தை, பொருளியலின் தொடர் வளர்ச்சியால், இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் சற்று மேம்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம், கப்பல் பட்டறை ஆகிய துறைகளில் வேலை அனுமதி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்த போதும் சேவைத்துறையில் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

ஆட்குறைப்பு குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது என்றும் காலியான வேலைகள் கூடுதலாய் இருந்ததாகவும் மனிதவள அமைச்சு கூறியது.

ஆட்குறைப்பின் எண்ணிக்கை முதலாம் காலண்டில் 2,300 ஆக இருந்தது என்றும் கடந்தாண்டு இறுதிக் காலாண்டில் அந்த எண்ணிக்கை 3,700 ஆக இருந்தது என்றும் தெரிவிக்கப்பப்ட்டது.

இவ்வாண்டின் முதல் காலாண்டின் ஆட்குறைப்பு எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டில் ஆகக் குறைவு என்று சொல்லப்பட்டது.

Top