Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அங் மோ கியோ நகைக் கடைக் கொள்ளை - சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்

அங் மோ கியோவிலுள்ள நகைக் கடையிலிருந்து 100,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்ததாகச் சந்தேகிக்கப்படும் 3 ஆடவர்களில் ஒருவரான 27 வயது M. ஜெகதீஷ் இன்று காவல்துறையினரால் மீண்டும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வாசிப்புநேரம் -
அங் மோ கியோ நகைக் கடைக் கொள்ளை - சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்

(படம்: todayonline/ Instagram)

அங் மோ கியோவிலுள்ள நகைக் கடையிலிருந்து 100,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்ததாகச் சந்தேகிக்கப்படும் 3 ஆடவர்களில் ஒருவரான 27 வயது M. ஜெகதீஷ் இன்று காவல்துறையினரால் மீண்டும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

புளோக் 574 அங் மோ கியோ அவென்யூ 10இல் அமைந்திருக்கும் Hock Cheong Jade and Jewellery நகைக் கடையிலிருந்து ஜெகதீஷும் மேலும் இரு நபர்களும் நகைகளைக் கொள்ளையடித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை நடந்த சம்பவத்தின் தொடர்பில் ஜெகதீஷ் மீது வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் குறைந்தது 6 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

அவர் ஏற்கனவே மற்ற குற்றச்செயல்களின் தொடர்பில் மேலும் 5 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

அவருக்கு உடந்தையாக இருந்ததாய்க் கூறப்படும் வீரமணி சுப்ரன் தாஸ், ஷரவிந்திரன் சுப்பையா இருவர் மீதும் சென்ற சனிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்