Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சில நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்பும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் முதலாளிகளின் வசிப்பிடத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்

சிங்கப்பூருக்குத் திரும்பும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் சிலர், முதலாளிகளின் வசிப்பிடத்திலேயே வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றமுடியும்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்குத் திரும்பும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் சிலர், முதலாளிகளின் வசிப்பிடத்திலேயே வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றமுடியும்.

குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் அதனைத் தெரிவித்தது.

வெளிநாடு செல்வதற்கு முன், ஒரு முதலாளியிடம் வேலை செய்த பணிப்பெண்களுக்கு மட்டும் அந்த நடைமுறை பொருந்தும்.

முதலாளிகளின் வசிப்பிடத்தில் பணிப்பெண்களுக்கான வீட்டில் தங்கும் உத்தரவு

இரண்டாம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவில் இடம்பெறும் நாடுகளிலிருந்து வருவோர் - ஒரு வாரம்

  • ஆஸ்திரேலியா
  • ஜப்பான்
  • நியூஸிலந்து
  • சவுதி அரேபியா

உள்ளிட்ட நாடுகள்

மூன்றாம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவில் இடம்பெறும் நாடுகளிலிருந்து வருவோர் - 10 நாள்

  • மலேசியா
  • இந்தோனேசியா
  • கம்போடியா
  • ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்
  • வியட்நாம்

உள்ளிட்டவை

வீட்டில் தங்கும் உத்தரவின் இறுதி நாளில் பணிப்பெண்கள் PCR பரிசோதனை மேற்கொள்ளவேண்டுமென்றும் ஆணையம் சொன்னது.

முதலாளிகளின் வசிப்பிடத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளும் பணிப்பெண்கள், தனி அறையில் இருக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

முதலாளிகளின் வசிப்பிடத்தில் தங்க முடியாத பணிப்பெண்கள், தகுந்த வசிப்பிடங்களில் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஆணையம் கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்