Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வானவில்லைவிட வண்ணமயமான இந்திய ஆடைகளைச் சித்திரிக்கும் அழகிய ஓவியங்கள்

இந்திய மரபுடைமை நிலையம், இன நல்லிணக்க தினத்தை முன்னிட்டு, பல்வேறு இந்தியப் பாரம்பரிய ஆடைகளைச் சித்திரிக்கும் ஓவியங்களை வெளியிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

இந்திய மரபுடைமை நிலையம், இன நல்லிணக்க தினத்தை முன்னிட்டு, பல்வேறு இந்தியப் பாரம்பரிய ஆடைகளைச் சித்திரிக்கும் ஓவியங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியக் கலாசாரத்தில் பல்வேறு மொழிகள், சமயங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவை இருக்கின்றன.

அதைப் போலவே இந்தியக் கலாசாரத்தில் காணக்கூடிய ஆடைகளிலும், வெவ்வேறு வகைகள் உள்ளன.

உடையை உருவாக்க எந்தவிதமான துணி பயன்படுத்தப்படுகிறது, உடையில் வரும் அலங்கார அங்கங்கள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன, துணி எந்தெந்த நிறக் கலவையில் உருவாக்கப்படுகிறது-என்பன போன்றவை வேறுபடும்.

அவை, அந்தந்தத் தனிப்பட்ட இந்திய இனக் குழுக்களைப் பொறுத்து மாறுபடும்.

இந்தியச் சமூகங்களின் வேறுபட்ட உடை வகைகளுக்கிடையிலான அழகிய வேறுபாடுகளைச் சேர்த்துச் சித்திரிக்கும் வண்ணம் அந்த ஓவியங்களை, நிலையம், அதன் Facebook பக்கத்தில் காட்சிக்கு வைத்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்