Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முன்னாள் குற்றவாளிகளை சமூகத்தில் ஒன்றிணைய உதவும் தொண்டூழியர்களின் பங்களிப்பை எடுத்துக்காட்டிய நாடகம்

சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் குற்றவாளிகளுக்கு இரண்டாம் வாய்ப்பளித்து, அவர்கள் சமூகத்துடன் மீண்டும் ஒன்றிணைய உதவும் CARE கட்டமைப்பின் உறுப்பினர்களை அதிபர் ஹலிமா யாக்கோப் பாராட்டினார்.

வாசிப்புநேரம் -
முன்னாள் குற்றவாளிகளை சமூகத்தில் ஒன்றிணைய உதவும் தொண்டூழியர்களின் பங்களிப்பை எடுத்துக்காட்டிய நாடகம்

படம்: MCI/Clement

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் குற்றவாளிகளுக்கு இரண்டாம் வாய்ப்பளித்து, அவர்கள் சமூகத்துடன் மீண்டும் ஒன்றிணைய உதவும் CARE கட்டமைப்பின் உறுப்பினர்களை அதிபர் ஹலிமா யாக்கோப் பாராட்டினார்.

முன்னாள் குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கான சமூகக் கட்டமைப்பு CARE.

அதன் 20ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் அதிபர் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார்.

சமூக சேவைக்கல்வி பயிலும் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் Care கட்டமைப்புடன் இணைந்து Ripples எனும் நாடகத் தயாரிப்பை அரங்கேற்றினர்.

முன்னாள் குற்றவாளிகளை சமூகத்தில் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் செயல்படும் தொண்டூழியர்கள், நிபுணர்கள் ஆகியோரின் பங்களிப்பை நாடகம் எடுத்துக்காட்டியது.

முன்னாள் குற்றவாளிகள் குறித்த சமூகத்தினரின் கண்ணோட்டத்தை மாற்றுவதற்கு தொண்டூழியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் நாடகம் சித்தரித்தது.

2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட CARE கட்டமைப்பில் இதுவரை 100க்கும் மேற்பட்ட சமய, மனநல, அடித்தள அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்