Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிகரித்து வரும் வருமான ஏற்றத்தாழ்வு தெளிவான, உண்மையான ஆபத்து - ஸைனல் சபாரி

அதிகரித்து வரும் வருமான ஏற்றத்தாழ்வு தெளிவான, உண்மையான ஆபத்து என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளர் ஸைனல் சபாரி எச்சரித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
அதிகரித்து வரும் வருமான ஏற்றத்தாழ்வு தெளிவான, உண்மையான ஆபத்து - ஸைனல் சபாரி

(படம்: Mediacorp)

அதிகரித்து வரும் வருமான ஏற்றத்தாழ்வு தெளிவான, உண்மையான ஆபத்து என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளர் ஸைனல் சபாரி எச்சரித்துள்ளார்.

ஏற்றத்தாழ்வைச் சரிசெய்ய முனைப்புடன் போராடுவதற்கு அதிபர் விடுத்துள்ள அழைப்பை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நான்காம் தலைமுறைத் தலைவர்கள், துணிவான மாற்றங்களை மேற்கொள்ள,
குறைந்த வருமான ஊழியர்கள் தொடர்பான தற்போதைய கொள்கைகளுக்குப் பின்னால் உள்ள அனுமானங்களைப் பற்றிக் கேள்வியெழுப்ப வேண்டும் என்றார் அவர்.

தொழில்துறை உருமாற்றத் திட்டக்குழுக்கள், சூழ்நிலை சார்ந்த திட்டங்களை வரைய முற்பட வேண்டும் என்று திரு. ஸைனால் குறிப்பிட்டார்.

எளிதில் பாதிக்கப்படக் கூடிய ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் வேலை இருப்பதை எவ்வாறு உறுதிசெய்யலாம் என்று அவை ஆராய வேண்டும்.

வயதானவர்கள் அல்லது குறைந்த கல்வித் தகுதி கொண்டவர்கள் மேம்படுத்திக் கொள்ளக்கூடிய திறன்கள் பற்றியும் ஒவ்வொரு தொழில்துறை உருமாற்றத் திட்டக்குழுவும் பேச வேண்டும் என்று திரு ஸைனல் வலியுறுத்தினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்