Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வுக்குக் கூடுதல் செலவே காரணம் - ஜனில் புதுச்சேரி

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வுக்கு, பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் எதிர்நோக்கும் கூடுதல் செலவே முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வுக்கு, பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் எதிர்நோக்கும் கூடுதல் செலவே முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வுக்குப் பிறகும் நிறுவனங்கள் அவற்றின் கூடுதல் செலவைச் சரிக்கட்ட இயலாது என்று போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறினார். CNA938 வானொலிக்கு அளித்த நேர்காணலில், அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

கட்டண உயர்வுக்கும், நிறுவனங்களின் செலவுக்கும் இடையிலான இடைவெளி நிரப்பப்படவேண்டும் என்றார் டாக்டர் ஜனில்.
திறனாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கே, போக்குவரத்து நிறுவனங்கள் அதிகச் செலவு செய்வதாக அவர் சொன்னார்.

பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் அவற்றின் செயல்திறனை உயர்த்த மேற்கொண்ட முயற்சிகளின் பலனாய், குறுகிய காலத்தில் பொதுப் போக்குவரத்தின் நம்பகத்தன்மை 7 மடங்கு மேம்பட்டதாக டாக்டர் ஜனில் தெரிவித்தார். பேருந்துச் சேவைகளின் தரமும் மேம்பட்டுள்ளது என்றார் அவர்.

அதே நேர்காணலில், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக விரிவுரையாளர் முனைவர் திமத்தி வாங் (Timothy Wong), பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் லாபம் ஈட்ட முடியாது என்று கருதினால், சேவையில் போட்டித்தன்மையைத் தக்கவைப்பது கடினம் என்பதைச் சுட்டினார்.

கட்டணத்தை உயர்த்துவதால் கிடைக்கும் கூடுதல் வருவாயை மட்டும் கொண்டு பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் லாபகரமாக இயங்கும் என்று கூறமுடியாது என்பதை அவர் விளக்கினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்