Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் 13 வயது மாணவர் மரணம் - சந்தேகத்தின் பேரில் 16 வயது மாணவர் கைது

ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் 13 வயது மாணவரின் மரணத்தில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் 16 வயது மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் 13 வயது மாணவரின் மரணத்தில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் 16 வயது மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாண்டவர் உயர்நிலை ஒன்று மாணவர்.

கைது செய்யப்பட்ட மாணவர் உயர்நிலை நான்கு மாணவர்.

சம்பவம் தொடர்பாகக் காலை 11:40க்கு, 6 பூன் லே அவென்யூவில் உள்ள அந்தப் பள்ளியில் இருந்து உதவி கேட்டுக் காவல்துறைக்கு அழைப்பு வந்தது.

பள்ளிக் கழிவறையில் பல்வேறு காயங்களுடன் உயர்நிலை ஒன்று மாணவர் கிடக்கக் காணப்பட்டார். அவ்விடத்திலேயே அவர்
மாண்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதின்ம வயது ஆண்கள் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லை என்று ஆரம்பப் புலனாய்வுகள் காட்டுவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து கோடரி ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் பற்றிய புலனாய்வு தொடர்கிறது.

கைது செய்யப்பட்ட மாணவர் மீது நாளை கொலைக்குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.

மனநல மதிப்பீட்டிற்காக அவரைத் தடுத்துவைப்பதற்கு நீதிமன்ற உத்தரவு நாடப்படும் எனக் கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்