Images
  • road
    படம்: Victor/ ROADS.sg Facebook Page

தம்மீது மோதவிருந்த லாரியின் கண்ணாடியை உடைக்க முயன்ற தாத்தா

தம்மீது மோதவிருந்த லாரியின் கண்ணாடியை உடைக்க முயன்றார் முதியவர் ஒருவர்.

விக்டர் என்பவர் Facebook-கின் Roads.sg பக்கத்தில் பகிர்ந்துகொண்ட காணொளியில் சிவப்பு வாகனம் இடப்பக்கம் திரும்புவதற்கு நின்றுகொண்டிருந்தது. சாலை விளக்குகள் இல்லாத அந்த இடத்தில், லாரிக்கு முன்னால் சாலையைக் கடக்கின்றார் முதியவர்.

அப்போது திரும்ப முயலும் வாகனம் முதியவரை மோதவிருந்தது. தக்க சமயத்தில் தப்பிக்கும் முதியவர், சினம் கொண்டு கையிலிருந்த குடையை எடுத்து வாகனத்தின் கண்ணாடி மீது அடிக்கின்றார்.


சம்பவம் திங்கட்கிழமை ( 3 டிசம்பர்) மாலை 5.30 மணியளவில் சாட்ஸ்வர்த் ரோடு, கிரேஞ் ரோடு சாலைச் சந்திப்பில் நடந்தது.

காணொளியைப் பார்த்தவர்களில் சிலர் சாலையைக் கடந்த முதியவரைக் குறைகூறினர். மற்றுஞ்சிலரோ, வாகன ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்துவதற்கு முன்னர் கவனமாக இருந்திருக்கவேண்டும் என்று கூறினர்.

Top