Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கொள்ளைச் சம்பவத்தில் 22 வருடத்திற்குப்பின் ஆடவர் கைது

கொள்ளைச் சம்பவத்தில் 22 வருடத்திற்குப்பின் ஆடவர் கைது

வாசிப்புநேரம் -
கொள்ளைச் சம்பவத்தில் 22 வருடத்திற்குப்பின் ஆடவர் கைது

( படம் :AFP )

22 வருடத்திற்குமுன் ஆயுதமேந்திக் கொள்ளையடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 59 வயது ஆடவருக்கு நான்காண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆடவரின் பெயர் ஃபூ சியாங் தியான்.

அவர் 1996 ஆம் ஆண்டு தன் இரு நண்பர்களான லீ, ஹொவ் ஆகியோரின் உதவியோடு 45,000 வெள்ளியைக் கொள்ளையடித்தார்.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஃபூ மலேசியா தப்பிச் சென்றுவிட்டார். மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர்.

லீ பணத்தேவைக்காக முன்னாள் முதலாளியிடமிருந்து OCBC வங்கியிலிருந்து பணம் எடுக்கும்போது ஹொவ், ஃபூ உதவியோடு திட்டமிட்டு ஆயுதமேந்திக் கொள்ளையடித்தாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

இந்தச் சம்பவத்திற்குமுன் அவர்கள் பிடோக் சௌத் அவின்யூ1, புளோக் மூன்றில் மோட்டார்சைக்கிள் ஒன்றையும் திருடியுள்ளனர்.

ஃபூவிற்கு நான்காண்டுச் சிறைத்தண்டனையோடு அவரது வாகன உரிமம் மூன்றாண்டுக்கு ரத்துச்செய்யப்பட்டது.

1996 ஆம் ஆண்டு லீக்கு 3 ஆண்டுகள், 2 மாதச்சிறையுடன், 6 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. அவர் வாகன உரிமமும் மூன்று ஆண்டுக்கு ரத்துச்செய்யப்பட்டது.

ஹொவுக்கு 3 ஆண்டுச் சிறையுடன், 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

ஃபூ ஐம்பது வயதைத் தாண்டியதால் அவருக்குப்
பிரம்படிகள் விதிக்கப்படவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்