Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கொள்ளை அடிக்கப்பட்டதாகப் பொய்ப் புகார் - சந்தேக நபர் மீது விசாரணை

கொள்ளை அடிக்கப்பட்டதாகப் பொய்ப் புகார் அளித்த சந்தேகத்தில் ஆடவர் மீது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

கொள்ளை அடிக்கப்பட்டதாகப் பொய்ப் புகார் அளித்த சந்தேகத்தில் ஆடவர் மீது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

56 வயதான அந்த ஆடவர், நேற்று முன்தினம் (நவம்பர் 19) கேலாங் லோரோங் 18-இல் (Geylang Lorong 18) அறிமுகமில்லாத இரு ஆடவர்களால் கொள்ளை அடிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.

இருப்பினும், ஆடவர் அளித்த தகவலில் சில முரண்பாடுகள் இருந்ததைக் காவல்துறையினர் கவனித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஆடவர் பொய்த் தகவல் அளித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

விசாரணை தொடர்கிறது.

அரசாங்க ஊழியரிடம் பொய்த் தகவல் அளித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆடவருக்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையோ, 5,000 வெள்ளி வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்