Images
  • Robinson
    படம்: Robinson

சிங்கப்பூரில் உள்ள கடைசி 2 ராபின்சன்ஸ் பேரங்காடிகளும் மூடப்படுகின்றன

சிங்கப்பூரில் உள்ள கடைசி இரண்டு ராபின்சன்ஸ் பேரங்காடிகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரம் மெதுவடைந்ததாலும் COVID-19 நோய்த்தொற்று ஏற்படுத்திய தாக்கத்தாலும் அவ்வாறு முடிவெடுத்ததாக நிறுவனம் கூறியது.

கடைசி இரண்டு ராபின்சன்ஸ் பேரங்காடிகள் The Heeren, Raffles City ஆகிய கடைத்தொகுதிகளில் உள்ளன.

கடைகள் மூடப்படுவது குறித்து ஊழியர்களிடம் தெரிவித்துவிட்டதாகவும் நிறுவனம் கூறியது.

கடைகள் மூடப்படுவதற்கு முன்னர் அவற்றில் உள்ள பொருள்கள் எல்லாம் விற்பனையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ராபின்சன்ஸ் பேரங்காடி மலேசியாவில் உள்ள இரண்டு கிளைகளையும் மூடுகிறது.

Shoppes at Four Seasons Place, The Gardens Mall ஆகிய இடங்களில் அதன் கிளைகள் உள்ளன. 

Top