Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாறையில் அத்தாப்பு வீட்டு ஓவியம். எங்கே?

பழைய கம்பத்து நாட்களில், கிராமவாசிகள் செடி, கொடிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை முறையாகப் பயன்படுத்தினர்.

வாசிப்புநேரம் -

பழைய கம்பத்து நாட்களில், கிராமவாசிகள் செடி, கொடிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை முறையாகப் பயன்படுத்தினர்.

காய்ந்த ஓலைகள் கொண்டு அத்தாப்பு வீடுகளின் கூரைகளை வேய்ந்தனர்.

அத்துடன் கூடைகள், தரை விரிப்புகள் ஆகியவற்றை முடையவும் காய்ந்த ஓலைகள் பயன்படுத்தப்பட்டன. அதனை எடுத்துக்காட்டும் ஓவியங்கள் பூமலையின் Ethnobotany தோட்டத்தில் உள்ள பாறைகளில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. 

பனை, மூங்கில், பாண்டான் செடிகளை விளையாட்டுகளுக்காகவும், உணவு வகைகளைப் பாதுகாக்கவும் கிராமவாசிகள் பயன்படுத்தினர்.

பிரபல 'தாரிக் உபி பினாங்'(Tarik Upih Pinang) விளையாட்டைச் சிறுவர்கள் விளையாடும் காட்சியும் பாறையில் சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளது.

உள்ளூர்க் கலைஞர் திரு. இப் இயூ சோங் அந்த ஓவியங்களை வரைந்துள்ளார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்