Images
  • raffles statue
    (படம்: Instagram.com/iamtravelmaker

சிங்கப்பூர் ஆற்றின் அருகே உள்ள ராஃபிள்ஸ் சிலையில் பழுதுபார்ப்புப் பணிகள்

சிங்கப்பூர் ஆற்றின் அருகே உள்ள சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் சிலையில் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.

பணிகள் இம்மாதம் 10ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும்.

அந்தக் காலக்கட்டத்தின்போது, சிலை மூடப்பட்டிருக்கும் என்றும் அதைப் படம்பிடிக்க முடியாது என்றும் வாரியம் குறிப்பிட்டது.

இதுகுறித்துப் பொதுமக்களின் புரிந்துணர்வை வாரியம் நாடுகிறது.

1819ஆம் ஆண்டில் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் முதலில் கால்பதித்த இடத்தில் அவரது சிலை எழுப்பப்பட்டுள்ளது.

Top