Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வான்திறன் சாகசக் காட்சியின்போது உள்மேற்கூரையில் சேதம் ஏற்படக் காரணம்? நிபுணர்கள் ஊகம்

சிங்கப்பூர் ஆகாயப்படையின் வான்திறன் சாகசக் காட்சியின்போது ஏற்பட்ட காற்றழுத்தமும் அதிர்வுகளும் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையத்தின் உள்மேற்கூரையும் விளக்குகளும் சேதமாகக் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
வான்திறன் சாகசக் காட்சியின்போது உள்மேற்கூரையில் சேதம் ஏற்படக் காரணம்? நிபுணர்கள் ஊகம்

(படம்: TODAY)

சிங்கப்பூர் ஆகாயப்படையின் வான்திறன் சாகசக் காட்சியின்போது ஏற்பட்ட காற்றழுத்தமும் அதிர்வுகளும் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையத்தின் உள்மேற்கூரையும் விளக்குகளும் சேதமாகக் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நிலையத்தின் புறப்படும் பகுதியிலும், கார் நிறுத்தத்திலும் உள்மேற்கூரையின் சில பகுதிகள் பிளந்து விழுந்ததாக டுடே இணையப்பக்கம் தெரிவித்தது. சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

சிங்கப்பூர் ஆகாயப்படையின் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு, மரினா அணைக்கட்டில் வாரயிறுதியின்போது இருமுறை ஆகாயக் கண்காட்சி நடைபெற்றது.

சிங்கப்பூர் ஆகாயப்படையின் 25 விமானங்கள் வான்திறன் சாகசக் காட்சியில் ஈடுபட்டன. சம்பவத்தைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஆகாயப்படை, அதன் விமானப் பாதைகளை மாற்றியுள்ளது.

சாகசக் காட்சியில் பயன்படுத்தப்பட்ட அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், உறிஞ்சும் சக்தியை வெளிப்படுத்துவதால் காற்றழுத்தம் மாறி, அதிர்வுகள் ஏற்பட்டிருக்கலாம் என்பது நிபுணர்கள் கருத்து.

சிங்கப்பூரில் கட்டடங்கள் அதிர்வுகளைத் தாங்கும் சக்தியைக் கொண்டிருக்கின்றன. இருப்பினும்
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, கட்டடங்கள் உள்மேற்கூரைகளிலிருந்து நிலைக்கால்களைப் பொருத்துவது குறித்துப் பரிசீலனை செய்யலாம் என்று நிபுணர்கள் கருத்துரைத்தனர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்