Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்-மலேசியா ரயில் திட்டம் குறித்து மலேசியா மறுபரிசீலனை செய்வது குறித்து வியப்பில்லை: வெளியுறவு அமைச்சர்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான ரயில் திட்டங்களை, மலேசிய அரசாங்கம் மறுபரிசீலனை செய்வது குறித்து சிங்கப்பூர் வியப்படையக் கூடாது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான ரயில் திட்டங்களை, மலேசிய அரசாங்கம் மறுபரிசீலனை செய்வது குறித்து சிங்கப்பூர் வியப்படையக் கூடாது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சிங்கப்பூர்-ஜொகூர் பாரு விரைவு ரயில் திட்டம், சிங்கப்பூர்- கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டம் ஆகிய இரண்டுமே மலேசியாவின் முன்னைய அரசாங்கம் முன்வைத்த திட்டங்கள் என்பதை அவர் சுட்டினார்.

மலேசியாவுடனான சிங்கப்பூரின் உறவுபற்றிக் குறிப்பிட்ட டாக்டர் பாலகிருஷ்ணன், நிரந்தரமான பக்கத்து நாடு என்னும் முறையில், மலேசியா உடனான உறவு எப்போதுமே சிக்கல் நிறைந்ததாகத்தான் இருக்கும் என்றார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்