Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்-ஜொகூர் பாரு விரைவு ரயில் திட்டம் சரியானபடி முன்னேறவில்லை: அமைச்சர் காவ் பூன் வான்

சிங்கப்பூருக்கும் ஜொகூருக்கும் இடையிலான RTS எனும் விரைவு ரயில் திட்டம் சரியானபடி முன்னேறவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கும் ஜொகூருக்கும் இடையிலான RTS எனும் விரைவு ரயில் திட்டம் சரியானபடி முன்னேறவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கூறியுள்ளார்.

உட்லண்ட்ஸையும் ஜொகூர் பாருவையும் இணைக்கும் விரைவு ரயில் திட்டத்தின் முன்னேற்றத்தைப் பற்றியும் திட்டம் எப்போது நிறைவடையும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வேய் நெங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தார் திரு காவ்.

கடந்தாண்டு கையெழுத்தான திட்டத்தின் முதல் இரு கட்டங்கள் பின்தங்கியுள்ளதாக அவர் கூறினார்.

மார்ச் இறுதிக்குள் ரயில் திட்டத்துக்கான குத்தகைக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்றார் திரு காவ். அழைப்பு விடுப்பதற்கான முதற்கட்ட ஆவணங்கள் குறித்தும் மலேசியா பதிலளிக்கவில்லை என்றார் அமைச்சர்.

அரசாங்கங்கள் மாறினாலும் இரு நாடுகளுக்கு இடையே செய்யப்படும் ஒப்பந்தங்கள் மாறக்கூடாது என்று குறிப்பிட்டார் திரு காவ். RTS திட்டம் எதிர்பார்த்தபடி 2024க்குள் தயாராகாது என்று நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்