Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பள்ளிகளில் பாதுகாப்புக்குத் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்: கல்வியமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்புக்குத் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பள்ளிகளில் பாதுகாப்புக்குத் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்: கல்வியமைச்சு

(கோப்புப் படம்: Gaya Chandramohan)

பள்ளிகளில் பாதுகாப்புக்குத் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தின் தொடர்பில் அமைச்சு கருத்துரைத்தது.

பள்ளி வளாகங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய
தேவையான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என்று அது கூறியது.

பள்ளிகள் தொடர்ந்து விழிப்புடன் செயல்படும் என்று அமைச்சு தெரிவித்தது.

இன்று, ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியின் சுமார் 97 விழுக்காட்டு மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர்.

பள்ளி மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஆதரவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று பள்ளிக்கு வந்திருந்த மாணவர்கள் சம்பவம் பற்றிய
தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளப் பாதுகாப்பான இடம் வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் வோங் சியூ ஹூங் (Wong Siew Hoong) தெரிவித்தார்.

மன ரீதியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ, நேரடி உதவித் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டன.

பள்ளிகளின் பாதுகாப்பைப் பற்றிப் பெற்றோர் கவலைப்படக்கூடும்.

பள்ளிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகத் திரு. வோங் உறுதியளித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்