Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Resorts World Sentosaவில் ஆள்குறைப்புக்கு ஆளான ஊழியர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டினர்: மனிதவள அமைச்சு

 Resorts World Sentosaவில் ஆள்குறைப்புக்கு ஆளான ஊழியர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டினர்: மனிதவள அமைச்சு

வாசிப்புநேரம் -

Resorts World Sentosaவில் ஆள்குறைப்புக்கு ஆளான ஊழியர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டினர் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆள்குறைப்புக்குப் பின்னர் அங்கு உள்ளூர் ஊழியர்களின் விிகிதம் 75 விழுக்காடாக உள்ளது, இதற்கு முன்னர் அது 66 விழுக்காடாக இருந்தது.

ஆள்குறைப்பின் போது உள்ளூர் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.

கடந்த ஆண்டு நிலவரப்படி Resorts World Sentosaவில் 7,000-க்கும் அதிகமான முழுநேர ஊழியர்கள் இருந்தனர்.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக கடந்த மாதம் Resorts World Sentosaவில் ஆள்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் எத்தனை பேர் ஆள்குறைப்புச் செய்யப்பட்டனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

ஆள்குறைப்புக்கு ஆளான ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்