Images
  • ryde app ph

Ryde கார்ப் பகிர்வுச் சேவை நிறுவனம் தூது-அஞ்சல் சேவை முன்னோட்ட முயற்சியில் பங்கேற்க விண்ணப்பம்

வாடகைக் கார்ப் பகிர்வுச் சேவை நிறுவனமான ரைட்(Ryde), Courier எனப்படும் தூது-அஞ்சல் சேவை முன்னோட்ட முயற்சியில் பங்கேறக நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. 

சிங்கப்பூரின் ஆகப் பெரிய தனியார் வாடகைக் கார்ச் சேவை நிறுவனமான கிராப், ஏற்கனவே அதற்கான விண்ணப்பத்தை ஆணையத்திடம் சமர்ப்பித்திருப்பதாக நம்பப்படுகிறது.

அத்தகைய முன்னோட்ட முயற்சிகளுக்கான உத்தேசத் திட்டங்களை ஆணையம் வரவேற்பதாகக் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

டாக்ஸி ஓட்டுநர்களும், தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்களும், சிறிய அளவிலான பொருட்களைத் தூது-அஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்கலாம்.

திட்டத்தின் சாத்தியம் குறித்து மதிப்பிட்டுவருவதாக ஆணையம் சொல்லிற்று.


Top