Images
அதிபர் சவால் அறநிதிக்கு இதுவரை $10.5 மில்லியன் திரட்டு
அதிபர் சவால் அறநிதிக்கு இதுவரை சுமார் 10.5 மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, மொத்தம் 8.3 மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டது. நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதி 70 அமைப்புகளுக்கு வழங்கப்படும்.
அவை உடற்குறையுள்ளவர்கள், மன நலப் பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு ஆதரவு அளிக்கப் பயன்படுத்தப்படும்.
நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதியில் பெரும் பங்கு 'Relay Majulah' எனும் அஞ்சலோட்டம் மூலம் திரட்டப்பட்டது.
200 பங்கேற்பாளர்கள் கூட்டாக 2000 கிலோமீட்டர் தூரத்தை 8 நாள்களில் ஓடி சுமார் 1.6 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நிதியைத் திரட்டினர்.
அதில் நாடாளுமன்ற நாயகரான டான் சுவான் ஜின்னும் கலந்துகொண்டார்.
அது சிங்கப்பூரின் ஆக நீண்ட அஞ்சலோட்டம்.
பொதுமக்கள் அதிபர் சவால் அறநிதிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து நிதி வழங்கலாம்.