Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த 70 ஊழியர்கள் COVID-19 சமூக சிகிச்சை நிலையங்களில் பணியாற்றுவர்

சிங்கப்பூர் ஆயுதப் படையின் மருத்துவ, தாதிமை, நிர்வாகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 70 ஊழியர்கள், COVID-19 சமூக சிகிச்சை நிலையங்களில் பணியாற்றுவர் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

அவர்கள் உட்லண்ட்ஸ் ஹெல்த் மற்றும் டான் டொக் செங் மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து இரு சமூக சிகிச்சை நிலையங்களில் பணியாற்றுவர் என்று திரு. இங் தமது Facebook பக்கத்தில் பகிர்ந்தார்.

முன்னிலை சுகாதார ஊழியர்கள் சுமார் 20 மாதங்களாக நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடிவருவதை அவர் சுட்டினார்.

சிங்கப்பூரின் சுகாதார அமைப்பையும் ஊழியர்களையும் பாதுகாப்பதே தற்போதைய கட்டுப்பாடுகளின் நோக்கம் என்றார் திரு. இங்.

வெகுவாக அதிகரித்துள்ள கிருமித்தொற்றுச் சம்பவங்களால் முன்னிலை ஊழியர்களின் மனநலமும் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தக் காலக்கட்டத்தில் அவர்களுக்கு ஆதரவு தேவை என்று அவர் சொன்னார்.

அதற்காகச் சிங்கப்பூர் ஆயுதப் படை தனது பங்கையாற்றும் என்றார் திரு. இங்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்