Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆற்றலையும் நடைமுறைகளையும் பாதிக்காத வகையில் செலவுகளைக் கட்டுப்படுத்த முனையும் தற்காப்பு அமைச்சு

தற்காப்பு அமைச்சு, ஆற்றலையும் நடைமுறைகளையும் பாதிக்காத வகையில் செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -
ஆற்றலையும் நடைமுறைகளையும் பாதிக்காத வகையில் செலவுகளைக் கட்டுப்படுத்த முனையும் தற்காப்பு அமைச்சு

(படம்: MINDEF)

தற்காப்பு அமைச்சு, ஆற்றலையும் நடைமுறைகளையும் பாதிக்காத வகையில் செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறியுள்ளார்.

நாளை மறுநாள் சிங்கப்பூர் ஆயுதப் படை தினம்.

அதனையொட்டிக் கருத்துரைத்த டாக்டர் இங்,
COVID-19 காலக்கட்டத்துக்குப் பிறகு உலகம் எவ்வாறு மாறக்கூடும் என்றும் முன்னுரைத்தார்.

சமூகம், பொருளாதாரம், அனைத்துலகத் தொடர்புகள் ஆகிய அனைத்தையும் கிருமித்தொற்று பாதித்திருப்பதாக டாக்டர் இங் கூறினார்.

நாடுகள், எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றின் சொந்த நலனைப் பாதுகாப்பதில் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளன என்பதும் இந்த நெருக்கடி நேரத்தில் புலப்பட்டது.

கிருமித்தொற்றால் மேலும் நிச்சயமற்ற உலகம் உருவாகியிருக்கிறது என்று கூறிய டாக்டர் இங், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சர்ச்சையை முக்கியமானதாகக் குறிப்பிட்டார்.

நாடுகளுக்கு இடையே எழும் பிரச்சினைகளின் தாக்கத்தை சிங்கப்பூர் தவிர்க்க இயலாது; அவை வர்த்தகத்தையும் பாதுகாப்பையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்றார் அவர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்