Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீவுகளில் அதிகரித்துள்ள மக்கள் கூட்டம்; பாதுகாப்பு இடைவெளியை உறுதிசெய்ய முயற்சிகள்

சிங்கப்பூரின் இதர தீவுகளுக்குச் செல்லும் மக்களிடையே பாதுகாப்பு இடைவெளியை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை அதிகாரிகள் வலுப்படுத்திவருகின்றனர். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் இதர தீவுகளுக்குச் செல்லும் மக்களிடையே பாதுகாப்பு இடைவெளியை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை அதிகாரிகள் வலுப்படுத்திவருகின்றனர்.

பொழுதுபோக்கிற்காக அந்தத் தீவுகளுக்குக் கூடுதலானோர் செல்லத் தொடங்கியுள்ளனர்.

புலாவ் உபின் தீவில் வருகையாளர் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது.

சிங்கப்பூரின் தென் தீவுகள் சிலவற்றிலும் அதே நிலை.

கடந்த ஆகஸ்ட் மாதம், 11 நண்பர்களுடன் லஸரஸ் (Lazarus) தீவுக்குச் சென்றிருந்த பிரிட்டிஷ் நாட்டவருக்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கையை மீறிய செயலுக்காக 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

அப்போதிலிருந்து பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள், லஸரஸ் தீவிலும் அதன் அருகிலுள்ள செயிண்ட் ஜான்ஸ் (St. John's) தீவிலும் அமலாக்க நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

சிங்கப்பூர் நில ஆணையம் நிர்வகிக்கும் தீவுகள், கடந்த ஜூன் மாதம் மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டன.

ஒவ்வொரு மாதமும் சுமார் 11,000 பேர் அங்குச் சென்று நேரத்தைச் செலவிடுகின்றனர்.

கடந்த ஆண்டு வருகையாளர்களின் மாதச் சராசரி எண்ணிக்கை 7,000ஆக இருந்தது.

தீவுகளுக்குச் செல்ல மரினா சவுத் (Marina South) படகு நிறுத்தும் இடத்திலிருந்து பயணிகள் புறப்படும் முன்னர், அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றியாகவேண்டும்.

புலாவ் உபினுக்குக் கடந்த மாதம் சுமார் 39,000 பேர் சென்றிருந்தனர்.

படகுகளுக்காகக் காத்திருக்கும் பகுதியில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்குப் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் அங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்