Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பொதுத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பான முறையில் நடைபெறும்: பிரதமர் உறுதி

எதிர்வரும் பொதுத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பாதுகாப்பான முறையில் நடைபெறும் என்று பிரதமர் லீ உறுதியளித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் பொதுத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பான முறையில் நடைபெறும்: பிரதமர் உறுதி

(கோப்புப்படம்: Xabryna Kek/ CNA)

எதிர்வரும் பொதுத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பாதுகாப்பான முறையில் நடைபெறும் என்று பிரதமர் லீ உறுதியளித்துள்ளார்.

COVID-19 சூழலில் பொதுத்தேர்தல் நடைபெறவிருப்பதால், அது வழக்கமான தேர்தலைப் போல இருக்காது.

அரசியல் கட்சிகள் பாதுகாப்பாகப் பிரசாரம் செய்வதையும், வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதையும் உறுதிசெய்வது முக்கியம் என்று பிரதமர் லீ கூறினார்.

எனவே வாக்களிப்பு நாளன்று, தேர்தல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

கூடுதல் வாக்களிப்பு நிலையங்கள், பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள், வாக்காளர்கள் வாக்குகளைச் செலுத்துவதற்கான குறிப்பிட்ட நேரம் ஆகியவை அவற்றுள் சில.

வேட்பாளர்கள் எவ்வாறு பிரசாரம் செய்யலாம் என்பது குறித்தும் விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வழக்கமான பிரசாரக்கூட்டங்கள் நடைபெறமாட்டா. ஆனால், வீட்டுக்கு வீடு செல்வது, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் மூலம் வாக்காளர்களிடம் பேசுவது ஆகியவற்றுக்குக் கூடுதல் வாய்ப்புகள் இருக்கும்.

தென் கொரியா, தைவான், சில ஐரோப்பிய நாடுகள் ஆகியவை கொரோனா கிருமிப்பரவல் சூழலில் தேர்தலை நடத்தியுள்ளன என்பதைப் பிரதமர் சுட்டினார்.

முறையான ஏற்பாடுகளுடன், பாதுகாப்பான சூழலில் பொதுத்தேர்தலை நடத்தமுடியும் என்று நம்புவதாகத் திரு லீ சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்