Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மாணவர்கள், TraceTogether கருவி அல்லது செயலியை மறந்துவிட்டால் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட மாட்டார்கள்: கல்வியமைச்சு

மாணவர்கள், TraceTogether கருவியையோ செயலியையோ மறந்துவிட்டால் அல்லது இடந்தவறி வைத்துவிட்டால் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படமாட்டார்கள் எனக் கல்வியமைச்சு கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

மாணவர்கள், TraceTogether கருவியையோ செயலியையோ மறந்துவிட்டால் அல்லது இடந்தவறி வைத்துவிட்டால் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படமாட்டார்கள் எனக் கல்வியமைச்சு கூறியுள்ளது.

ஆனால், வெளிப்புற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள், அந்த நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களில் SafeEntry பதிவுமுறைக்கு TraceTogether மட்டுமே பயன்படுத்தப்பட்டால், மறக்காமல் TraceTogether கருவியையோ செயலியையோ எடுத்துச் செல்ல வேண்டும்.

பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் நடப்பில் உள்ளதால், அவை பொதுவாகவே பாதுகாப்பான இடங்கள் தான் என்று அமைச்சு அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டது.

எனினும், மாணவர்கள் கருவி அல்லது செயலியைப் பள்ளியில் தங்களுடன் வைத்திருக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

அதன் மூலம், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த முடியும் என்று அமைச்சு சொன்னது.

ஜூன் முதல் தேதியிலிருந்து, கிருமிப்பரவல் அபாயம் அதிகமுள்ள இடங்களில் SafeEntry பதிவுமுறைக்கு TraceTogether மட்டுமே பயன்படுத்த முடியும் என இன்று அறிவிக்கப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்