Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூன் முதல் தேதியிலிருந்து கிருமிப்பரவல் அபாயம் அதிகமுள்ள இடங்களில் TraceTogether மட்டுமே பயன்படுத்த முடியும்

சிங்கப்பூரில், கிருமிப்பரவல் அபாயம் அதிகமுள்ள இடங்களில் SafeEntry பதிவுமுறைக்கு, ஜூன் முதல் தேதியிலிருந்து TraceTogether மட்டுமே பயன்படுத்த முடியும்.

வாசிப்புநேரம் -
ஜூன் முதல் தேதியிலிருந்து கிருமிப்பரவல் அபாயம் அதிகமுள்ள இடங்களில் TraceTogether மட்டுமே பயன்படுத்த முடியும்

(படம்: Ang Hwee Min)

சிங்கப்பூரில், கிருமிப்பரவல் அபாயம் அதிகமுள்ள இடங்களில் SafeEntry பதிவுமுறைக்கு, ஜூன் முதல் தேதியிலிருந்து TraceTogether மட்டுமே பயன்படுத்த முடியும்.

மக்கள் அதிக நேரம் நெருங்கிய தொடர்பில் இருக்கும் கடைத்தொகுதிகள், வேலையிடங்கள், பள்ளிகள், உணவகங்கள் போன்ற இடங்களுக்கு அது பொருந்தும்.

வேறு SafeEntry முறைகளை அவ்விடங்களில் பயன்படுத்த இயலாது.

அந்த விவரங்களைச் சுகாதார அமைச்சும்,
அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்கக் குழுமமும் அறிவித்தன.

TraceTogether திட்டமும், SafeEntry முறையும், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புத் தடங்களை அடையாளம் காண உதவும் முக்கிய மின்னிலக்கக் கருவிகள் என்று அவை தெரிவித்தன.

சிங்கப்பூரில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் TraceTogether செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் அல்லது TraceTogether கருவியைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்று இரு அமைப்புகளும் தெரிவித்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்