Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரியைத் தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் - காவல்துறை விசாரணை

பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரியைத் தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் - காவல்துறை விசாரணை

வாசிப்புநேரம் -

Lau Pa Sat உணவங்காடி நிலையத்தில் பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரி ஒருவர் மீது, தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு சுமார் 10:15 மணிக்கு, அந்தச் சம்பவம் குறித்து உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

கொரோனா கிருமிப்பரவலுக்கு எதிரான, இரண்டாம் கட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிங்கப்பூரில் மீண்டும் நடப்புக்கு வந்த முதல் நாள் அது.

அன்றிலிருந்து, சமூக ஒன்றுகூடல்களில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை எட்டில் இருந்து ஐந்துக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளின்படி, ஒன்றுகூடல்களில் ஐந்து பேருக்கு மேல் கலந்துகொள்ள முடியாது.

அதனை அந்த உணவங்காடி நிலையத்தில் இருந்த ஒரு குழுவினரிடம், பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரி விளக்கிச் சொல்வதைக் காட்டும் காணொளி, Facebook-இல் பதிவேற்றம் செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட 3 நிமிடம் நீடித்த காணொளியில் அந்த அதிகாரியைச் சில தகாத வார்த்தைகளைக் கொண்டு அந்தக் குழுவில் இருந்தவர்கள் தாக்கிப் பேசியது பதிவானது.

அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் காவல்துறை தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்