Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

SAFRA, McDonalds உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் சில ஆட்டங்களை ஒளிபரப்பத் திட்டம்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் சில ஆட்டங்களை அவற்றின் கிளைகளில் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளதாக SAFRA அமைப்பும் McDonalds உணவகமும் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் சில ஆட்டங்களை அவற்றின் கிளைகளில் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளதாக SAFRA அமைப்பும் McDonalds உணவகமும் தெரிவித்துள்ளன.

உலகக் கிண்ணப் போட்டியில் மொத்த ஆட்டங்கள் 64.

அவற்றை ஒளிபரப்பும் உரிமை கிடைத்திருப்பதாக மீடியாகார்ப்பும், சிங்டெல், Starhub தொலைத் தொடர்பு நிறுவனங்களும் அறிவித்திருந்தன.

அதைத் தொடர்ந்து SAFRAவும், McDonalds-உம் அவற்றின் முடிவு குறித்து அறிவித்துள்ளன.

இதற்கிடையே, உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான திட்டங்கள் பற்றி மக்கள் கழகம் இதுவரை சொல்லவில்லை.

2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை மக்கள் கழகம் 30 சமூக மன்றங்களில் இலவசமாக ஒளிபரப்பியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்