Images
  • spize
    (படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

Spize உணவக நச்சுணவுச் சம்பவம்: River Valley கிளையின் உரிமம் உடனடி ரத்து

Spize உணவகத்தின் உணவில் சல்மோனெல்லா கிருமி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நச்சுணவுச் சம்பவம் ஏற்பட்டதற்கு அதுவே காரணம் என்று அவர்கள் கூறினர்.

அவர்களில் ஒருவர் மரணமடைந்தார்.

Spize உணவகத்தின் ரிவர் வெலி கிளையில் சமைக்கப்பட்ட, சமைக்கப்படாத என்று இரண்டு வகை உணவிலும் சல்மோனெல்லா கிருமி கண்டுபிடிக்கப்பட்டது.

ரிவர் வெலி கிளையின் குளிர் அறையின் கதவுக் கைப்பிடியிலும் அந்தக் கிருமி கண்டுபிடிக்கப்பட்டது.

அது அந்தக் கிளையின் உணவுகளைக் கடுமையாய்ப் பாதித்திருந்ததாக அதிகாரிகள் கூறினர். 

Spize உணவகத்தின் ரிவர் வெலி கிளையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

Top