Images
  • SASA Closes
    (படம்: Sasa Facebook)

Sasa ஒப்பனைப் பொருள் விற்பனை அங்காடி அதன் சிங்கப்பூர் கடைகளை மூடவிருக்கிறது


ஹாங்காங்கைத் தளமாகக் கொண்டு செயல்படும் Sasa ஒப்பனைப் பொருள் விற்பனை அங்காடி, சிங்கப்பூரிலுள்ள தனது 22 கடைகளை மூடவிருக்கிறது.

தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதால் அந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக Sasa கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 170 பேர் பாதிக்கப்படுவர்.

உள்நாட்டு வேலை நியமனச் சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

சிங்கப்பூரில் தனது வர்த்தகத்தை வளப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் உரிய பலனைத் தரவில்லை என்று Sasa தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனம் தற்போது தனது வளங்களை ஹாங்காங், மக்காவ், சீனா, மலேசியா ஆகியவற்றுக்குத் திருப்பி விட்டுள்ளது.

இணைய வர்த்தகத்திலும் Sasa கவனம் செலுத்தி வருகிறது.  

Top