Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

SATA CommHealth சுகாதார அமைப்பின் ஊழியர்கள் 50 பேருக்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டது

SATA CommHealth சுகாதார அமைப்பின் ஊழியர்கள் 50 பேருக்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டது

வாசிப்புநேரம் -
SATA CommHealth சுகாதார அமைப்பின் ஊழியர்கள் 50 பேருக்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டது

(கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic)

சிங்கப்பூரின் SATA CommHealth சுகாதார அமைப்பின் ஊழியர்களில் சுமார் 50 பேர், கொரோனா கிருமிப்பரவலுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு Pfizer- BioNTech தடுப்பூசி போடப்பட்டது.

இனிவரும் நாள்களில் இன்னும் அதிகமான ஊழியர்களுக்குத் தடுப்பூசி போட அமைப்பு திட்டமிட்டுள்ளது.

அமைப்பின் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களில் 90 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் மூத்தோருடனும் நோயால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுடனும் ஒவ்வொரு நாளும் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள்.

கடந்த ஆண்டு அத்தகையோர் வசிக்கும் 11,000-க்கும் அதிகமான வீடுகளுக்கு அமைப்பின் ஊழியர்கள் சென்றுள்ளனர்.

2019ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது 104 விழுக்காடு அதிகம்.

எனவே, கிருமிப்பரவலிலிருந்து சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

இதுவரை, ஊழியர்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்