சவுதி அரேபியாவுடன் உணவு வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சி - முதற்கட்டமாக இறால் இறக்குமதி அமைச்சர் சான் சுன் சிங்
சவுதி அரேபியாவிடமிருந்து உறையவைக்கப்பட்ட இறாலை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது சிங்கப்பூர். எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையில் உணவுப் பொருள் வர்த்தகம் அதிகரிப்பதற்கு அது வகைசெய்யும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் சவுதி அரேபியாவிலிருந்து இறால் இறக்குமதி செய்வதை வெகு சிலரே எண்ணிப் பார்த்திருப்பர்; ஆனால் தற்போது கட்டுப்படியாகும் விலையில் இறக்குமதி தொடங்கியிருக்கிறது என்பதை அமைச்சர் சுட்டினார்.
விவோ சிட்டி கடைத்தொகுதியில் உள்ள Fairprice Xtra பேரங்காடிக்குச் சென்றிருந்த போது அவர் அவ்வாறு கூறினார்.
சவுதி அரேபியாவிலிருந்து மற்ற உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வது தொடர்பாகவும் தற்போது ஆராய்ந்து வருவதாக அமைச்சர் சான் கூறினார்.
சிங்கப்பூர், உணவுப் பொருள் வர்த்தகத் தொடர்பை விரிவுபடுத்திக் கொண்டே இருக்கும் என்றார் அவர்.
தற்போது சவுதி அரேபியாவின் Red Sea இறால் FairPrice பேரங்காடிகளில் மட்டுமே கிடைக்கும்.
எதிர்காலத்தில் Red Sea இறால்கள் எல்லாப் பேரங்காடிளிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.