Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

SBS Transit நிறுவனத்தை ஏமாற்ற சதித் திட்டத்தில் ஈடுபட்ட மேலாளருக்கு 11 மாதச் சிறைத்தண்டனை

SBS Transit நிறுவனத்தை ஏமாற்றுவதற்கு அந்நிறுவனத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளருடன் சதி செய்த குற்றத்திற்காக நடவடிக்கை மேலாளர் ஒருவருக்கு இன்று 11 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
SBS Transit நிறுவனத்தை ஏமாற்ற சதித் திட்டத்தில் ஈடுபட்ட மேலாளருக்கு 11 மாதச் சிறைத்தண்டனை

(கோப்புப்படம்: Jeremy Long)

SBS Transit நிறுவனத்தை ஏமாற்றுவதற்கு அந்நிறுவனத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளருடன் சதி செய்த குற்றத்திற்காக நடவடிக்கை மேலாளர் ஒருவருக்கு இன்று 11 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சூன் லீ பேருந்துப் பணிமனையில் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்ட Venda Engineering & Trading நிறுவனத்தில் பணிபுரிந்தார் 34 வயது கோ டாவெய்.

47 வயது ஓங் சாங் ஃபேய் என்பவருடன் சேர்ந்து அவர் Azech Engineering எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். பேருந்துப் பணிமனையில் தற்காலிகப் பணிகளைச் செய்வதற்கு அந்நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஆனால், இந்த வேலைகளை உண்மையாக Venda Engineering & Trading நிறுவனத்தின் ஊழியர்கள் செய்தனர்.

இந்த வழியில் கடந்த மூன்றாண்டுகளில் SBS Transit நிறுவனத்திடமிருந்து 210,000 வெள்ளியை அவர்கள் மோசடி செய்தனர்.

Azech நிறுவனம், SBS Transit நிறுவனத்திடமிருந்து பெறும் பணத்தில் 17 விழுக்காடு கோவிற்கு அளிக்கப்பட்டது. எஞ்சிய 83 விழுக்காட்டை ஓங் பெற்றுக்கொண்டார்.

அவ்வாறு 2013லிருந்து 2015 வரை $66,610.50 என்ற தொகையையும் அதன் பின்னர் $145,192.55 என்ற தொகையையும் இருவரும் பெற்றனர்.

இருவரின் செயல்பாடுகளைப் பற்றி அவர்களின் மேற்பார்வையாளர்களுக்குத் தெரியவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்