Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணையப் பாதுகாப்பு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் - 1.5 மில்லியன் வெள்ளி மோசடி

இணையப் பாதுகாப்பு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்தவர்கள் ஒன்றரை மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளனர். 

வாசிப்புநேரம் -

இணையப் பாதுகாப்பு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்தவர்கள் ஒன்றரை மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளனர்.

அவர்களிடம் பலர் பணத்தை இழந்துள்ளனர்.

சென்ற மாதத்திலிருந்து நடந்துள்ள அந்த இணைய மோசடி குறித்துக் கவனமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மோசடியில் ஈடுபட்டோர், SingTel நிறுவனத்தில் வேலை செய்பவர்களைப் போலவும், இணையப் பாதுகாப்பு அதிகாரிகளைப் போலவும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.

பாதிக்கப்பட்டோரின் இணையத் தொடர்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களின் கணினிகளில் மென்பொருளைப் பதிவேற்றம் செய்யுமாறு மோசடியில் ஈடுபட்டோர் கேட்டுக்கொண்டனர்.

பாதிக்கப்பட்டோரின் கணினிக்குள் செல்வதற்கான வழி கிடைத்ததும், அவர்களின் வங்கிக் கணக்குக்குள் செல்லும்படிக் கூறி ஆளமாறாட்டக்காரர்கள் பணத்தைத் திருடினர்.

அத்தகைய மோசடியால் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தால் உடனடியாகக் கணினியை அணைத்துவிட்டு வங்கிக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கும்படி காவல்துறை அறிவுறுத்துகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்