Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வங்கிகள் அல்லது சிங்கப்பூர் நாணய ஆணையத்திடமிருந்து வரும் போலித் தகவல்கள், அழைப்புகள் குறித்து எச்சரிக்கை

சிங்கப்பூர் நாணய வாரிய அதிகாரிகள் என்று கூறி பொதுமக்களை அழைக்கும் அல்லது அவர்களுக்குக் குறுந்தகவல் அனுப்புவோரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு வாரியம் அறிவுறுத்தியது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் நாணய வாரிய அதிகாரிகள் என்று கூறி பொதுமக்களை அழைக்கும் அல்லது அவர்களுக்குக் குறுந்தகவல் அனுப்புவோரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு வாரியம் அறிவுறுத்தியது.

அத்தகைய அழைப்புகளையோ குறுந்தகவல்களையோ பெறுபவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் போன்ற விவரங்களைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சந்தேக நபர்கள், தொழில்நுபத்தின் மூலம் தங்கள் தொலைபேசி எண்களை மாற்றி வாரியத்தின் தொலைபேசி எண்ணை Caller IDஇல் காட்டலாம். அல்லது வாரியத்தின் சின்னத்தைத் தங்கள் WhatsApp படமாக வைத்திருக்கலாம்.

மோசடி நபர்கள் பெரும்பாலும் வங்கிக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டதாகக் கூறி வங்கி விவரங்களைக் கேட்பார்கள். வங்கிகளிலிருந்து அழைப்பதாகவும் அவர்கள் கூறுவதுண்டு.

மோசடி அழைப்புகளை எதிர்கொள்வோர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  1. இணைய வங்கி அல்லது கைத்தொலைபேசி வங்கிக் கணக்கு விவரங்களையோ கடன்பற்று அட்டை விவரங்களையோ பகிரவேண்டாம். OTP கடவுச்சொற்களைப் பகிர்ந்துகொள்வதையும் தவிர்க்கவும்.
  2. வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை ஏதும் செய்யாத நேரத்தில், வங்கிகளிலிருந்து வரும் வேண்டுகோளை நிராகரிக்க வேண்டும்.
  3. சிங்கப்பூர் நாணய வாரியம் அல்லது வங்கிகளிலிருந்து தேவையில்லாமல் வரும் அழைப்புகளைப் புறக்கணிக்கவும்.

மேலும் படிக்க:


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்