Images
  • gavel
    ( படம்: AFP )

தொடர் மோசடிகளில் ஈடுபட்ட இளையருக்கு 14 மாதச் சிறை

தொடர் மோசடிகளில் ஈடுபட்டு வந்த ஓர் இளையருக்கு 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

21 வயது Ronny Lee Jia Jie, 20 மோசடிக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிறார்.

மேலும் அவர் மீதான மற்ற 61 குற்றச்சாட்டுகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படலாம்.

தம்மை மீடியாகார்ப் நிறுவனத்தின் ஊழியர் என்று கூறிக்கொண்டதும் அவர் புரிந்த குற்றங்களில் ஒன்று.

2014 டிசம்பருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரலுக்கும் இடையே பல்வேறு நபர்களிடமிருந்து சுமார் 43 ஆயிரம் வெள்ளியைப் பெற்று அவர் மோசடி செய்துள்ளார்.

அது போன்ற பல்வேறு மோசடிகளில் Lee ஈடுபட்டுள்ளார்.

அவர் செய்த ஒவ்வொரு குற்றத்துக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டையும் அபராதமும் விதிக்கப்படலாம். 

Top