Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மோசடி செய்த சந்தேகத்தின்பேரில் 30 வயதுப் பெண் கைது

சிங்கப்பூரில் மோசடி செய்த சந்தேகத்தின்பேரில் 30 வயதுப் பெண் கைது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதிக்கும், மார்ச் முதல் தேதிக்கும் இடையில் நடந்த பல்வேறு மோசடிச் சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 30 வயதுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Carousell இணையத் தளத்தில் ஆடம்பரக் கைக்கடிகாரங்களை விளம்பரம் செய்த அவர், வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய பிறகும் அந்தக் கைக்கடிகாரங்களை விநியோகிக்கவில்லை.

விசாரணைக்குப் பிறகு பிடோக் பிரிவு காவல்துறை அதிகாரிகள் இம்மாதம் 12ஆம் தேதி அந்தப் பெண்ணை அடையாளம்கண்டு கைதுசெய்தனர்.

நாளை அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்.

ஏமாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குப் 10ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.

இணையத்தில் விற்பனையாகும் பொருள்களை வாங்கும்போது, பொருள்களைப் பெற்றுக்கொண்ட பிறகு பணம் செலுத்தும் தெரிவைப் பயன்படுத்தும்படிக் காவல்துறை ஆலோசனை கூறியுள்ளது.

குறிப்பாக அதிக விலையுள்ள பொருள்களை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து வாங்கும்படியும் அது அறிவுறுத்தியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்