Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நடக்கும் மோசடிகளில் முதலிடத்தில் உள்ளது என்ன?

சீன அதிகாரிகளைப் போல் நடித்து இணையத்தில் மோசடி செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் நடக்கும் மோசடிகளில் முதலிடத்தில் உள்ளது என்ன?

(படம்: TODAY/Raymond Limantara)


சீன அதிகாரிகளைப் போல் நடித்து இணையத்தில் மோசடி செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூரில் நடக்கும் மோசடிகளில் அத்தகைய மோசடியே முதலிடத்தில் உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சீன அதிகாரிகளைப் போல் நடித்துச் செய்யப்படும் மோசடிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு மீண்டும் உயர்ந்திருக்கிறது.

அதில் ஒருவருக்கு சட்ட விரோதமாக ஏதோ அனுப்பப்பட்டிருப்பதாக, தூதஞ்சல் நிறுவனம் என்று கூறியோ, சட்ட அமலாக்க அதிகாரி என்று கூறியோ ஓர் அழைப்பு வரும்.

சிலவேளைகளில் அந்த அழைப்பு, சீனக் காவல்துறை அதிகாரி என்று சொல்லப்படுபவருக்கு மாற்றி விடப்படும்.

மற்றவர்களிடமிருந்து தனித்து வந்து, சம்பந்தப்பட்டவரின் மறைச்சொல், வங்கி விவரங்களைச் சொல்லுமாறு அவர் கோருவார்.

உரிய தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடிக்காரர்கள் பணத்தை உருவிவிட்டு மாயமாகி விடுவர்.

அப்படியான ஒரு மோசடி முயற்சியில் OCBC வங்கி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டனர்.

27 லிருந்து 50 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் பாதிப்பின்றித் தப்பினர்.

அவர்கள் இழக்கவிருந்த தொகையின் மொத்த மதிப்பு 190,000 வெள்ளி.

OCBC வங்கியின் இயந்திரத் தொழில்நுட்பம் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனையை உடனே கண்டறிந்து தடுத்து நிறுத்தியது.

இந்த ஆண்டின் முற்பாதியில் இணைய மோசடி தொடர்பில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 3,600.

அவற்றில் இழக்கப்பட்ட தொகை 83 மில்லியன் வெள்ளி.

சென்ற ஆண்டின் அதே காலக்கட்டத்துடன் ஒப்புநோக்க மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கையும், அவற்றில் இழந்த தொகையும் 40 விழுக்காடு அதிகம்.

சந்தேகத்துக்குரிய அழைப்பு வந்தால், அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்