Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மோசடிகளால் 1.3 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழப்பு

பல்வேறு மோசடிச் சம்பவங்களின் தொடர்பாக 154 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
மோசடிகளால் 1.3 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழப்பு

(கோப்புப் படம்: CNA)


பல்வேறு மோசடிச் சம்பவங்களின் தொடர்பாக 154 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அந்தச் சந்தேக நபர்கள் 15 வயதிற்கும் 68 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.

சிங்கப்பூர் முழுதும் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இணைய வர்த்தக மோசடி உள்பட 230 மோசடிச் சம்பவங்களில் சந்தேக நபர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

அந்தச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், 1.3 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழந்தனர்.

சந்தேக நபர்களில் சிலர் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தில் ஈடுபட்டதின் தொடர்பிலும் விசாரிக்கப்படுகின்றனர்.

அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், மோசடி செய்ததற்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதலில் ஈடுபட்ட குற்றத்துக்கு, 10 ஆண்டுச் சிறையோ, 500,000 வெள்ளி வரையிலான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்க முடியும்.

இணைய மோசடிகளுக்குப் பலியாகாமல்இருக்க, சேவைகளுக்கு முன் கூட்டியே கட்டணம் செலுத்தாமல், விற்பனையாளர்கள் சேவை வழங்கிய பிறகு கட்டணம் செலுத்தவேண்டும் என்று காவல்துறையினர் ஆலோசனை கூறுகின்றனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்