Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பண மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் 200 பேரிடம் விசாரணை

பண மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 200 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக சிங்கப்பூர் காவல் துறை கூறியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
பண மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் 200 பேரிடம் விசாரணை

(படம்: Pixabay)

பண மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 200 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக சிங்கப்பூர் காவல் துறை கூறியிருக்கிறது.

இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கையில் சந்தேக நபர்கள் 16 வயதுக்கும் 63 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

அவர்கள் சுமார் 450 பணமோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. பெரும்பாலான மோசடிச் சம்பவங்கள் இணையம்வழி நடத்தப்பட்டன.

மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் 570,000 வெள்ளியை இழந்தனர் என்று காவல்துறை கூறியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்குப் பத்தாண்டுச் சிறைத்தண்டனையும் 500,000வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்