Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

myResponder செயலி மூலம், அபாய அழைப்பு பெற்றவர்களில் சுமார் பாதிப்பேர் உடனே பதிலளித்தனர்

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் myResponder செயலி  மூலம், அபாய அழைப்புகளைப் பெற்றவர்களில் சுமார் பாதிப்பேர் உடனே பதிலளித்துள்ளனர். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் myResponder செயலி மூலம், அபாய அழைப்புகளைப் பெற்றவர்களில் சுமார் பாதிப்பேர் உடனே பதிலளித்துள்ளனர். 

இதயச் செயலிழப்பு அபாயம் தொடர்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எச்சரிக்கைத் தகவல்கள் அனுப்பப்பட்டன. அவற்றுக்குச் சுமார் 500 பேர் உடனே பதிலளித்தனர்.

கிருமிப்பரவல் சூழலால், பிப்ரவரியிலிருந்து ஜூன் வரை myResponder செயலியின் சேவை தடைபட்டது.

அபாய எச்சரிக்கைத் தகவல் கிடைத்தவுடன் செயலில் இறங்குவோருக்கு மேலும் சிறந்த பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, பொது இடங்களில் உள்ள பத்தாயிரம் AED முதலுதவிப் பெட்டிகளில், சுமார் 20,000 முகக்கவசங்களும், கிருமிநாசினித் திரவமும் வைக்கப்படும்.

இதயச் செயலிழப்பு போன்ற அபாய நேரத்தில் உதவிக்கு வருவோரின், தனிப்பட்ட சுகாதாரப் பாதுகாப்புக்கு அவை உதவும் என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

சொந்தப் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும் என்பதால், கூடுதலானோர் ஆபத்து நேரத்தில் உதவ முன்வரக்கூடும்.

முகக்கவசங்களும், கிருமிநாசினியும் சேர்க்கப்பட்ட முதலுதவிப் பெட்டிகள் நேற்று முன்தினத்திலிருந்து பொருத்தப்படுகின்றன.

அடுத்த ஆண்டுத் தொடக்கத்துக்குள், தீவு முழுவதும் அத்தகைய முதலுதவிப் பெட்டிகள் வைக்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்