Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 கிருமி தொற்றியதாக சந்தேகிக்கப்பட்ட 219 பேரை மருத்துவமனைக்குக் கொண்டுசேர்த்த சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, இன்று காலை நிலவரப்படி, COVID-19 கிருமி தொற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட 219 பேரை அவசர மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு்சென்றதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

அவர்களில் பெரும்பாலோர் கடந்த ஒரு மாத காலத்திற்குள் தாங்களாகவே குடிமைத் தற்காப்புப் படையைத் தொலைபேசியில் அழைத்ததாக அது குறிப்பிட்டது.

பொது மருத்துவர்களும், பலதுறை மருந்தகங்களும் சிலமுறை அழைத்ததாகக் கூறப்பட்டது.

குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவ வாகனங்களில் பணியாற்றுவோர் அனைவரும் இனி முழுமையான தற்காப்புச் சாதனங்களை அணிந்திருப்பர்.

COVID-19 தொடர்பான அழைப்புகள் மட்டுமின்றி, அனைத்துவித அழைப்புகளுக்கும் அவர்கள் அத்தகைய உடைகளை அணிந்துசெல்வர்.

முழுமைப் பாதுகாப்பு உடையில் அவர்களைப் பார்க்கும் பொதுமக்கள் பீதியடைய வேண்டாமென்று குடிமைத் தற்காப்புப் படை வலியுறுத்தியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்