Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உலகின் ஆக வலிமைவாய்ந்த தீயணைப்பு, மீட்புக் கப்பல்கள்-சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அறிமுகம்

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, 3 புதிய தீயணைப்பு, மீட்புக் கப்பல்களைச் சேவையில் ஈடுபடுத்தியிருக்கிறது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, 3 புதிய தீயணைப்பு, மீட்புக் கப்பல்களைச் சேவையில் ஈடுபடுத்தியிருக்கிறது.

சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்தக் கப்பல்களில் ஒன்றான Red Sailfish உலகின் ஆகச் சக்திவாய்ந்த தீயணைப்புக் கப்பல் எனக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

கடலில் தனது தீயணைப்புத் திறன்களை மேம்படுத்தவும் கடல்துறை நெருக்கடிகளின்போது மேலும் திறம்படச் செயல்படவும் புதிய கப்பல்கள் உதவும் என்று அது சொல்லிற்று.

அவற்றையும் சேர்த்து குடிமைத் தற்காப்புப் படையின் கடல்துறைப் பிரிவு அணியில் மொத்தம் 8 தீயணைப்புக் கப்பல்கள் உள்ளன.

வருங்காலத்தில் மேலும் கப்பல்கள் சேர்க்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சண்முகம், 2017இல் லோயாங் கடல்துறைத் தீயணைப்புச் சாவடி அமைக்கப்பட்ட பிறகு சம்பவங்களைக் கையாளும் குடிமைத் தற்காப்புப் படையின் திறன் மேம்பட்டிருப்பதாகக் கூறினார்.

அதன் கப்பல்கள் சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளுக்கு 45 நிமிடத்திற்குள் சென்று சேரமுடியும் என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த ஈராண்டில் கல், பொங்கோல் (Gul, Punggol) சாவடிகள் செயல்படத் தொடங்கும்போது அந்த நேரம் மேலும் குறையும் என்றார் அவர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்